Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவில் குளத்தில் ... சின்னத்தடாகம் மாரியம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்! சின்னத்தடாகம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு: எந்த கோவிலுக்கு சிலைகள் சொந்தம்?
எழுத்தின் அளவு:
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு: எந்த கோவிலுக்கு சிலைகள் சொந்தம்?

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2016
11:06

சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளின் சென்னை வீட்டில் உள்ள, கேலரி’ மற்றும் பூமிக்கு அடியில் புதைத்து வைத்து இருந்த, பல கோடி ரூபாய்  மதிப்புள்ள, 34 பஞ்சலோக சிலைகள் உட்பட, 100 சிலைகளை, நேற்று போலீசார் மீட்டனர். எட்டு மணி நேர சோதனைக்கு பின், ஆயிரம் ஆண்டுகள்  பழமையான ஓவியங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை, ஆழ்வார்பேட்டை, முர்ரேஸ் கேட்’ சாலையில் உள்ள, பங்களா வீட்டில் வசித்து வந்தவன் தீனதயாள், 78; சர்வதேச சிலை கடத்தல்காரன்  சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய கூட்டாளியான அவன், மனைவி பெயரில், அபர்ணா கேலரி’ என்ற பெயரில், பழங்கால பொருட்கள் விற்பனை  கூடம் நடத்தி வந்தான். அவன், சுபாஷ் சந்திர கபூருடன் சேர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சோழர்  கால சிலைகளை திருடி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தி வந்தான். நேற்று முன் தினம், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி., சுந்தரம், இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனம் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தி, பல  கோடி  ரூபாய் மதிப்புள்ள, 55 கற்சிலைகளை மீட்டனர்.

அவனது வீட்டில், இரண்டு அறைகள் பூட்டப்பட்டு இருந்தன. போலீசார், நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று, நேற்று காலை, 11:30 மணியில் இருந்து,  மாலை, 6:30 மணி வரை அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். காலை, 11:35 மணிக்கு முதல் அறை திறக்கப்பட்டது. அதில், வைக்கோல்  சுற்றப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு கடத்த தயாராக வைக்கப்பட்டு இருந்த, சிறிய மற்றும் பெரிய அளவிலான ஐம்பொன் சிலைகள் இருந் தன. யாருக்கும் சந்தேகம் வராத வகையில், கேலரி’யில் கலைநயமிக்க பொருட்களுடன், கடத்தல் சிலைகளையும் தீனதயாள் அடுக்கி வைத்து இருந் தான். பின், 12:45 மணிக்கு, மற்றொரு அறையை போலீசார் திறந்தனர். அதிலும், ஐம்பொன் சிலைகளை தீனதயாள் பதுக்கி வைத்து இருந்தான். ÷ நற்று, ஒரு நாளில் மட்டும், 34 ஐம்பொன் சிலைகள் உட்பட, 100 சிலைகளை போலீசார் மீட்டனர். சில பார்சல்களை பிரித்து எடுக்கவே போலீசார்  படாதபாடுபட்டனர். இன்னும் சில சிலைகள் பூமிக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவற்றை அடையாளம் காண வெகு நேரமானதால் காலதாமதம் ஏற்பட்டது.

ஒவ்வொரு சிலையின் மீதும் போலீசார், பெயின்டால் எண்ணிக்கையை எழுதினர். மேலும், நேற்று நடந்த சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு  செய்யப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சோழர் காலத்து சிலைகளையும், ஆயிரம் அபூர்வ ஓவியங்களையும் தீனதயாள், பிரத்யேகமாக  தயாரிக்கப்பட்டு இருந்த பெட்டியில் பதுக்கி வைத்து இருந்தான். மேலும், பழங்கால செம்பு, வெண்கலத்தால் செய்யப்பட்ட பொருட்களையும்  அவன் பதுக்கி வைத்து இருந்தான்; அவற்றையும் போலீசார் மீட்டனர். ஒரு கோவிலில் இருந்த சிலை உள்ளிட்ட அத்தனை பொருட்களையும் திருடி  வந்து பதுக்கி வைத்து இருந்தான். அந்த பொருட்களை வகை பிரிக்க போலீசாருக்கு போதிய அவகாசம் இல்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,  பொன்.மாணிக்கவேல் கூறுகையில்,மீட்கப்பட்ட, 34 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட அத்தனை சிலைகளையும்,  நீதிமன்றத்தில் ஒப்படைத்து,  பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.  பங்களா வீடாக இருப்பதால், ஒவ்வொரு இடத்திலும் சோதனை நடத்த, குறைந்தது, 15   நிமிடமாவது தேவைப்படுகிறது. வீடு முழுக்க, பல கோடி ரூபாய் மதிப்புள்ள  கற்சிலைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதனால், நாளையும், ÷ சாதனை நடத்த  உள்ளோம்,” என்றார்.

எந்த கோவிலுக்கு சிலைகள் சொந்தம்?

தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி, சோதனை நடந்த இடத்திற்கு வந்து, சிலைகள் எந்த நுாற்றாண்டை சேர்ந்தவை; எந்த ÷ காவிலில் இருந்து திருடப்பட்டு இருக்கலாம் என, கணித்தார். சில சிலைகள், செயற்கையாக பிரித்து எடுக்கப்பட்டு இருப்பதை கண்டு வேதனைப் பட்டார். இதுகுறித்து நாகசாமி கூறியதாவது: விலை மதிப்பற்ற, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகளை திருடி வந்து வைத்துள்ளனர்.  தமிழகத்தின் அரிய பொக்கிஷமான இந்த சிலைகளை, வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு முன், தடுத்து நிறுத்திய தமிழக போலீசாருக்கு என்  மனமார்ந்த பாராட்டுக்கள். போலீசார் மீட்டுள்ள சிலைகள் அனைத்தும் சோழர் காலத்தில் செய்யப்பட்டவை.  அதில், சிவன், நர்த்தனம் ஆடும்  கணபதி சிலைகளும் உள்ளன. மீட்கப்பட்டுள்ள, 34 ஐம்பொன் சிலைகளுடன், 42 வகையான பழங்கால பொருட்களும் உள்ளன. இந்த வீட்டில் ÷ மலும் பல சிலைகள் பதுக்கி வைத்து இருக்கலாம். இவ்வாறு நாகசாமி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar