பழநி: பழநிமலைக்கோயிலில் சித்தர் போகரின் ஜெயந்திவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணி நவபாஷாண சிலையை வடிவமைத்தவர் சித்தர் போகர். இவர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். ஜூன்.,3 ம்-தேதி அவரது ஜெயந்திவிழாவை முன்னிட்டு மலைக்கோயில் போகர் சன்னதியில் அவர் வணங்கி வழிபட்ட புவனேஸ்வரி அம்மன், பச்சை மரகத லிங்கத்திற்கு பால், பழங்கள், பன்னீர், சந்தனம், விபூதி உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மரகதலிங்கம், புவனேஸ்வரிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். 108 போகர் அஷ்டோத்திரம் சொல்லி பக்தர்கள் வழிபாடு செய்தனர். வைகாசி கார்த்திகையை முன்னிட்டு பழநிகோயிலில் காவடி தீர்த்தக்குடங்களுடன் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஞானதண்டாயுத பாணிசுவாமியை தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு 108 திருவிளக்குபூஜையும், இரவு 7 மணி தங்கரத புறப்பாட்டிலும் பக்தர்கள் பங்கேற்றனர்.