தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 10 நிரந்தர உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இவை ஜூன்.,3ம் தேதி திறந்து எண்ணும் பணி நடந்தது. திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பக்தர்கள், கிராமத்தினர் இப் ணியில் காலை 9.30 மணி முதல் 5.30 மணிவரை ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.24 லட்சத்து 56 ஆயிரத்து 576, 98 கிராம் தங்கம், 540 கிராம் வெள்ளி காணிக்கையாக வழங்கி உள்ளனர். 38 நாட்களில் ரூ.24.56 லட்சம் கிடைத்துள்ளது. இங்கு சித்திரை திருவிழாவின் போது வைக்கப்பட்ட தற்காலிக உண்டியல் மூலம் ரூ.11 லட்சத்து 36 ஆயிரத்து 831 வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.