மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம் பஸ்களுக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2016 12:06
செஞ்சி: மேல்மலையனுார் கோவிலுக்கு வரும் பஸ்கள், தற்காலிக பஸ்நிலையம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேல்மலையனுாரில் ஒவ்வொரு மாதமும் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. இதில், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக வளத்தி சாலையில் தனியார் இடத்தில் தற்காலிக பஸ்நிலையம் அமைப்பது வழக்கம். இந்த மாதம் முதல் ஈயகுணம் சாலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைத்துள்ளனர்.
இது குறித்து செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் 5 லட்சம் மக்கள் கலந்து கொள்கின்றனர். இது சம்மந்தமாக கடந்த 1ம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த கூட்டத்தில், அணைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஈயகுணம் சாலையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையம் வரை மட்டுமே பேரூந்துகளை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. எனவே பொதுமக்கள் இதனை ஏற்று காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.