திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலின் ஆதிசேஷ குளம், பராமரிப்பு குறைபாட்டுடன் காணப்பட்டது. குளத்தில் திருப்பணி செய்யுமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, கோவில் நிர்வாகம், குளத்தைச் சீரமைக்கும் பணியைத் துவக்கியுள்ளது. சேதமடைந்திருந்த படிக்கட்டுகள், முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டு வருகின்றன.