பவானிசாகர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2016 11:06
பவானிசாகர்: பவானிசாகர் அருகே தொட்டம்பாளையத்தில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்,நேற்று நடந்தது. கடந்த, 6ம் தேதி, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. விநாயகர் பூஜையுடன் முதல்கால யாக பூஜைகள் நடந்தன. பக்தர்கள் முளைப்பாரியுடன், ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஊர் பொதுமக்கள் சார்பில், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.