பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2016 11:06
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் வரும் 11ம் தேதி அலங்கார திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. நெட்ட ப்பாக்கம் அடுத்துள்ள வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் வரும் 11ம் தேதி காலை 8 மணிக்கு மூலவர் அலங்கார திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி பால், தயிர், பழவகைகள், இளநீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. இந்த திருமஞ்சனம் நிகழ்ச்சியின் போது ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடி கொடுத்த பூமாலை திருவேங்கடமுடைய õனுக்கு சாத்தப்படுகிறது. ஏற்பாடுகளை வடுக்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.