மங்கலம்பேட்டை: வலசை முத்துமாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த வலசை முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. தீமிதி திருவிழாவையொட்டி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 10:00 மணிக்கு அரவான் களபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணியளவில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.