சுபமுகூர்த்தம் நாள் எதிரொலி பழநி வீதிகளில் நெரிசல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2016 12:06
பழநி: பழநியில் சுபமுகூர்த்த தினமான நேற்று நுõற்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், காதணிவிழா போன்ற விழாக்களால் அடிவார வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநிகோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக சுபமுகூர்த்த தினங்களில் பழநி அடிவாரம் திருஆவினன்குடிகோயில் மற்றும் தனியார் திருமண மண்டபங்கள், மடங்களில் நுாற்றுக்கு மேற்பட்ட கல்யாணம், காதணிவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு வருவோர் மலைக்கோயிலுக்கு செல்லும் பூங்காரோடு, அடிவாரம் இட்டேரிரோடு, திருஆவினன்குடி கோயில், சரவணப்பொய்கை, சன்னதிவீதி உள்ளிட்டபகுதிகளில் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தினர். இதனால் அந்நாட்களில் அடிவார வீதியெங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோன்ற விஷேச நாட்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதலாக போலீசார் நியமனம் செய்ய மாவட்ட எஸ்.பி., சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.