நரிக்குடி: நரிக்குடி அருகே சேதுராயனேந்தலில் ஊர்காவல் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு நாட்களாக நடந்த விழாவில் முதல் நாள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை பிரசாதம் வழங்குதல், இரண்டாம் நாளில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மூன்றாம் நாளில் விஷேச சாந்தி பூர்ணாகுதி தீபாராதனை, நான்காம் நாளில் நான்காம் கால யாக பூஜை, கோ பூஜையுடன் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.