சேத்துார்: சேத்துார் மேட்டுப்பட்டியில் மலையழகு அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாளில் விநாயகர் பூஜை, ஹோமங்கள் நடந்தது. நேற்று காலையில் காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடல் எடுத்து வந்தனர்.தொடர்ந்து விநாயகர்,சுப்பிரமணியர்,மலையழகு அம்மனுக்கு வெங்கட்ராமன் தலைமையிலான அர்ச்சகர்கள் குப்பாபிஷேகம் செய்தனர். அம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. திருச்செந்துார் பாதயாத்திரைக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
*தெற்கு வெங்காநல்லுார் சிவகாமியம்மாள் சமேத சிதம்பரலிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் கடந்த 6 ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10.45 மணிக்கு கணேசபட்டர், முத்துக்குமார பட்டர் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம், வீதி உலா நடந்தது.