தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே உள்ள கொங்கப்பட்டி காளியம்மன் கோயில் விழா மூன்று நாள் நடந்தது. விழாவில் அம்மன் அலங்காரத்துடன் சன்னதி வருதல், மாவிளக்கு, முளைப்பாரி, பொங்கல் இடுதல், கிடா பலியிடப்பட்டது. சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமனோர் தரிசனம் செய்தனர். விழா நிறைவில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.