பெண்ணாடம்: அரியராவி முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பெண்ணாடம் அடுத்த அரியராவி முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நான்காம் நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். நேற்று காத்தவராய ன், ஆரியமாலா பிறப்பு கதைப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இன்று (14ம் தேதி) இரவு 8:00 மணியளவில் சப்த கன்னிமார்கள் தவம் அழித்தல் நிகழ்ச்சி, 15ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், 16ம் தேதி கழுகு மரம் ஏறுதல், 17ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.