ரமலான் மாதத்தில் தொழுகை மிக முக்கியமானது. எப்போது நீங்கள் தொழுதாலும் இந்த ஏழு வசனங்களைச் சொல்லுங்கள். அளவிலா கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப்பெரும் கிருபையாளனாகவும்இருக்கின்றான்.இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் (இபாதத் செய்கிறோம்). மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி.உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
அல்லாஹ்வே தொழுகை குறித்து அருமையான கருத்துக்களை குர்ஆனில் சொல்கிறான். திண்ணமாக, நான் அல்லாஹ், என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடிபணிவீராக. என்னை நினைவுகூர்வது தொழுகையை நிலை நிறுத்தும். உண்மையாகவே, குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.45 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.15 மணி.