பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
11:06
திருமழிசை: திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், நாளை, ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் கோவிலில், ஆனி பிரம்மோற்சவ திருவிழா, நாளை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக இன்று மாலை, அங்குரார்ப்பணம் நடைபெறும். அதை தொடர்ந்து, நாளை காலை, 6:00 மணி முதல், 7:00 மணிக்குள், துவஜாரோகணம் (கொடியேற்றம்) நடைபெறும். அன்று மாலை பெருமாள் மலர் அலங்காரத்தில் தங்கதோளுக்கிணியானில் எழுந்தருளி வீதிவுலாவும் நடைபெறும். தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை மற்றும் மாலை வேளைகளில் பலவகையான வாகனங்களில் பெருமாள் வீதிவுலாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை, 17ம் தேதி, காலையிலும், தேரோட்டம் 21ம் தேதி, காலையிலும் நடைபெறும்.