பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016 
11:06
 
 குளித்தலை: மேலபுதுப்பட்டி மகா காளியம்மன் கோவில் திருவிழாவில், அக்கினி சட்டி ஏந்தியவாறு, தீக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, மேலபுதுப்பட்டியில் விநாயகர், உஜ்சினி மகா காளியம்மன் மற்றும் கருப்பசாமி கோவில் திருவிழா முன்னிட்டு, அம்முனிப்பாறை மண்டபம் அருகில் உள்ள சுனைப்பகுதியில் இருந்து, உஜ்சினி மகா காளியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டு, சுவாமி கோவிலில் குடிபுகுந்தது. தொடர்ந்து, பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து கிடா வெட்டி பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், கருப்பசாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியில், நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் ஏராளமான ஆட்டு கிடா குட்டிகளை வழங்கி வழிபட்டனர். தொடர்ந்து அம்முனிப்பாறை அருகில் உள்ள மண்டபத்தில் இருந்து அக்கினி சட்டி மற்றும் அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்து, உஜ்சினி காளியம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர். மேலும், மஞ்சள் நீராட்டுடன் சுவாமி திருவீதிஉலா நடந்தது,