Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாம் அந்த ரங்கனே! ஆசை ஆசையாய் படியுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராஜயோகம் வந்தாச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2016
03:06

மாயணமும், மகாபாரதமும் பாரதத்தின் இரு கண்களாக போற்றப்படுகின்றன. இதில் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படும் மகாபாரதம், மண்ணாசை கூடாது என்பதை வலியுறுத்துகிறது.மகாபாரதப் போர் குருக்ஷேத்திரத்தில் முடிந்தசமயத்தில், பிதாமகரான பீஷ்மர் அம்பினால் செய்யப்பட்ட படுக்கையில் படுத்திருந்தார். அப்போது கிருஷ்ணர், பஞ்சபாண்டவர்களை அவரிடம் அழைத்துச் சென்று, உயிர்கள் பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடும் வழி, ஜீவரகசியம், மோட்ச வழிமுறையை எடுத்துரைக்க வேண்டினார். பீஷ்மரும் கிருஷ்ணரின்வேண்டுதலை ஏற்றுக் கொண்டார். நாராயணன் ஒருவனேநித்தியமும் சத்தியமும் ஆனவர். யார் ஒருவன் அவரை முழுநம்பிக்கையுடன் பூஜிக்கிறானோ, அவனுக்கு சகல சவுபாக்கியம்கிடைப்பதோடு, மோட்சமும் நிச்சயமாக கிடைக்கும் என்று பீஷ்மர் உபதேசித்தார். அப்போது, இன்னொருசுலபமான வழியையும்அவர்களுக்குக் கூறினார். யார் ஒருவர் தினமும் நாராயணனின் 24 திருநாமங்களை(பெயர்களை) ஜபிக்கிறார்களோ,அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி, அஷ்ட ஐஸ்வர்யம், பொன், பொருள், தனதானியம், ஆரோக்கியம், நல்ல குடும்பம், குழந்தைகள், நல்ல புகழ், வாகனவசதி, வாழ்வில் ராஜயோகம்கைகூடும்.

பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணனின் திருவடிகளை அடையலாம், என்றார். அந்த 24 நாமங்களும் மிகவும் எளிமையானவை. எல்லாரும், அட்சய திரிதியை அன்று, இந்த ஸ்லோகங்களைச் சொல்லி லட்சுமி நாராயணரை வழிபட்டால் பொன்னும் பொருளும் சேரும்.ஓம் கேசவாய நமஹ:ஓம் சங்கர்ஷணாய நமஹ:ஓம் நாராயணாய நமஹ:ஓம் வாசுதேவாய நமஹ:ஓம் மாதவாய நமஹ: ஓம் ப்ரத்யும்னாய நமஹ:ஓம் கோவிந்தாய நமஹ:ஓம் அநிருத்தாய நமஹ:ஓம் விஷ்ணவே நமஹ:ஓம் புருஷோத்தமாய நமஹ:ஓம் மதுசூதனாய நமஹ:ஓம் அதோக்ஷஜாய நமஹ:ஓம் திரிவிக்ரமாய நமஹ:ஓம் லட்சுமி நரசிம்ஹாயநமஹ:ஓம் வாமனாய  நமஹ:ஓம் அச்சுதாய நமஹ:ஓம் ஸ்ரீதராய நமஹ:ஓம் ஜனார்தனாய நமஹ:ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ:ஓம் உபேந்த்ராய நமஹ: ஓம் பத்மநாபாய நமஹ:ஓம் ஹரயே நமஹ:ஓம் தாமோதராய நமஹ:ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ: தினமும் இந்த மந்திரங்களை ஜபிக்கும்போது, துளசியும், சுத்தமான நீரும் நைவேத்யமாக வைத்துவழிபட்டால் போதும்.விஷ்ணு அருளால் இனி எப்போதும்  ராஜயோகமே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar