வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். உண்மையில் இவருக்கு ஏகாஷிபிங்களி என்றே பெயர். குபேரனின் தந்தை விச்ரவசு, கேகசி என்ற அரக்கியை மணந்துகொண்டார். அவர்களுக்குராவணன்,கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகிய பிள்ளைகள் பிறந்தனர். விச்ரவசுவின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவரேகுபேரன். இவரின் மனைவி சித்ரலேகா. நளகூபரன், மணிக்ரீவன் என்னும் இரு பிள்ளைகள். சங்கநிதி, பதுமநிதி ஆகிய இருநிதிகளுக்கும் அதிபதி. அளகாபுரியை ஆள்பவர். சிவனை நோக்கி 800 ஆண்டுகள் தவமிருந்து சகல நிதிகளையும் பெற்றார்.