கிள்ளை: சி.மானம்பாடி ஊற்றுக்கட்டை அம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். கிள்ளை அருகே, சி.மானம்பாடி ஊற்றுக்கட்டை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த ௧6ம் தேதி காலை அனுக்ஞை மற்றும் கணபதி ÷ ஹாமத்துடன் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜைக்கு பிறகு, கலசப்புறப்பாடு துவங்கியது. காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள், கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி சக்ரவர்த்தி தீட்சிதர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வக்கீல் ராஜாராமன் தலைமையிலான விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்தனர்.