வெளியூர் அல்லது சுபநிகழ்ச்சிகளுக்கு கிளம்பும் போது நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து புறப்படுவது வழக்கம். அன்றைய தினம் அவரவர் நட்சத்திரம் அல்லது ராசிக்கு சந்திராஷ்டம நாளாகவோ அல்லது எமகண்டம், ராகுகால நேரமாகவோ இருந்தால் பரிகாரம் செய்து விட்டு கிளம்பலாம். அருகிலுள்ள கோவிலில் உள்ள விநாயகருக்கு சிதறுகாய் உடைத்து வழிபடலாம். இல்லாவிட்டால் பசுவுக்கு வாழைப்பழம் தந்து விட்டுப் புறப்படலாம். இதனால் பயணம் தடையின்றி இனிதாக அமையும். அன்றாடப் பணிகளைச் செய்வதற்கோ, அலுவலகம் செல்வதற்கோ நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கத் தேவையில்லை.