பழநி கோயிலில் பாதுகாப்பு குறைவு செக்யூரிட்டி நிறுவனத்தின் மீது புகார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2016 12:06
பழநி: பழநிமலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் பாதுகாப்பு பணி சரியில்லை என, இணை ஆணையரிடம் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் ஒப்பந்த அடிப்படையில் திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் செக்யூரிட்டி நிறுவன பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனம் டெண்டர் எடுத்தபின் பழநிமலைக்கோயிலில் ராஜகோபுரம் மேல் தனிநபர் துாக்குமாட்டி தற்கொலை, பணியில் இருந்த பாதுகாவலர் பாதவிநாயகர்கோயில்பின்புறம் மதுஅருந்திய சம்பவம் போன்றவை பாதுகாப்பு குறைபாட்டிற்கு சான்றாக உள்ளது. மேலும் பணிநியமனத்திற்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வருகிறது. ஆகையால் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு மீண்டும் பாதுகாப்புபணி வாய்ப்பு தரக்கூடாது என வலியுறுத்தி பாலதண்டாதபாணி பக்தர்கள் பேரவை, மக்கள் எழுச்சிபேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சாலையோர சிறுவியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் புகார் மனு அளித்தனர். அவர் மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.