பதிவு செய்த நாள்
21
ஜூன்
2016
11:06
கரூர்: பசுபதிபாளையம் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கரூர், பசுபதிபாளையம் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், வாஸ்து சாந்தி, மிருதசங்கிரணம், அஷ்டபந்தன மருந்து சாத்துல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, நேற்று காலை, 4.30 மணிக்குஇரண்டாம் கால பூஜை, நாடி சந்தனம், பூர்ணாஹீதி ஆகிய யாகங்கள் நடந்தது. காலை, 6.30 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.