பழநிகோயில் இரண்டாம் வின்ச் பராமரிப்பு பணிக்காக நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2016 11:06
பழநி : பழநி மலைக்கோயில் இரண்டாம் வின்ச் நேற்று முதல் நிறுத்தப்பட்டு புதிய கம்பிவடக்கயிறு மாற்றும் பணிகள் நடக்கிறது.
பழநி மலைக்கோயிலுக்கு 8 நிமிடங்களில் எளிதாக செல்லும் வகையில் நாள்தோறும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று வின்ச்கள் (மின் இழுவை ரயில்கள்) இயக்கப்படுகின்றன. இவற்றில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கம்பிவடக்கயிறுகள் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி இரண்டாம் வின்ச் பராமரிப்பு பணிக்காக நேற்று நிறுத்தப்பட்டு புதிதாக கம்பிவடக்கயிறு மாற்றும் பணிநடக்கிறது. ஏற்கனவே பலத்த காற்று காரணமாக அடிக்கடி ரோப்கார் நிறுத்தப்படுதால் சனி, ஞாயிறு, விடுமுறை தினத்தில் குவியும் பக்தர்கள் வின்ச்ல் அதிகநேரம் காத்திருந்து செல்கின்றனர்.
தற்போது வின்ச் பராமரிப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் மேலும் கூடுதல்நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ ஏற்கனவே முதலாம் எண் வின்ச்சில் கம்பிவடக்கயிறு மாற்றப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் வின்ச்சில் புதிய கம்பிவடக்கயிறு மாற்றும்பணி நடக்கிறது. நான்கு, ஐந்து நாட்களில் முடிந்துவிடும். 2 வின்ச்கள், ரோப்கார் இயங்குகிறது. கூட்டம் குறைவாக உள்ளதால் பக்தர்களுக்கு பாதிப்புஇல்லை,” என்றார்.