பதிவு செய்த நாள்
27
ஜூன்
2016
12:06
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பால கணேசர் கோவிலில் நடந்த, நுாதன சொர்ணாங்கி சாற்று விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள இக்கோவிலில் நேற்று காலை, 7:00 மணிக்கு பாலகணேசருக்கு அபிேஷகம் நடந்தது. பின், கன்னிகா பர÷ மஸ்வரி கோவிலில், காலை, 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகம், பஞ்சகவ்யம் சங்கல்ப பூஜையும் நடந்தன. மகளிர் சங்கம் மற்றும் வைஸ்ய சங்க உறுப்பினர்கள் சீர்தட்டுகள் எடுத்து வர, சொர்ண அங்கி வீதி உலாவாக, பால கணேசர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பால கணேசருக்கு சொர்ண அங்கி அணிவிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.