Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைப்பற்றப்பட்ட 9 சிலைகள் பாதுகாப்பு ... ரமலான் சிந்தனைகள் - 23: வாழ்வுக்கு தேவையான படிப்பு ரமலான் சிந்தனைகள் - 23: வாழ்வுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹைரதாபாத் விநாயகருக்கு இனி தெலுங்கானா லட்டு பிரசாதம்!
எழுத்தின் அளவு:
ஹைரதாபாத் விநாயகருக்கு இனி தெலுங்கானா லட்டு பிரசாதம்!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2016
10:06

திருப்பதி : தெலுங்கானா மாநிலம், ஹைரதாபாத்தில், உருவாக்கப்படும் விநாயகருக்கு, இனி, தெலுங்கானா லட்டை, நிவேதனம் செய்ய, செயற்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகில் உள்ள, ஹைரதாபாத்தில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 60 அடி உயர விநாயகர் சிலை ஏற்படுத்தபடும். இதை கண்காணிக்க, செயற்குழு ஒன்றை, இப்பகுதியினர் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த விநாயகர் கையில் வைக்க, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீபக்த ஆஞ்சநேயா இனிப்பக உரிமையாளர், மல்லிகார்ஜூனா, லட்டு தயார் செய்து, இலவசமாக அளித்து வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற, விநாயகர் சதுர்த்திக்கு, அவர், 18 லட்சம் ரூபாய் செலவில், 6 டன் எடையுள்ள, லட்டை தயார் செய்து, அனுப்பினார். இந்த லட்டை, விநாயகர் கையில் நிறுத்த, ஒரு கிரேன், தனியாக ஏற்பாடு செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி முடிந்த பின், விநாயகரை கரைக்க கொண்டு செல்லும் முன், லட்டு பிரசாதத்தை உடைத்து, பக்தர்களுக்கு வழங்குவர். அதை வாங்க பக்தர்கள், போட்டியிடுவர். இதனால், அந்நாட்களில், பலத்த உயிர்சேதம் ஏற்படுவதும் உண்டு. கடந்தாண்டு செய்த லட்டு பிரசாதத்தை, பக்தர்களுக்கு வினியோகிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பிரசாதத்தை வினியோகிக்காமல், செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே, லட்டை பங்கிட்டு கொண்டதாக தகவல் வெளியானது.மேலும், தெலுங்கானாவில் உருவாக்கப்படும் விநாயகருக்கு, ஆந்திராவிலிருந்து, லட்டு கொண்டு வருவது முறையல்ல, என எண்ணிய செயற்குழுவினர், தெலுங்கானாவிலேயே, லட்டு பிரசாதத்தை தயார் செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால், இனி, ஹைரதாபாத் விநாயகருக்கு, ஆந்திரா லட்டு நிவேதனம் இல்லை, என முடிவிற்கு வந்த மல்லிகார்ஜூனா, ஆந்திராவின் புதிய தலைநகர், அமராவதியில் உருவாக்கப்படும் லட்டு பிரசாதத்தை, வழங்க முடிவு செய்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar