அமாவாசை தவிர மற்ற நாட்களிலும் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2016 12:06
தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது. அரிசிமாவினால் கோலம் இடுவதால் எறும்பு போன்ற சிறிய உயிர்களுக்கும், சாதம் வைப்பதால் காகம் முதலிய பறவைகளுக்கும், அன்னதானம் அளிப்பதால் ஏழைகளுக்கும் உணவளித்த புண்ணியம் உண்டாகும். உயிர்களுக்கு உதவுவதை பூதயக்ஞம் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனை தினமும் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.