கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிவில் சனிப் பிரதோஷ வழிபாடு நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி, மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, மகா ஆராதனை நடந்தது. தொடர்ந்து பிரதோஷ மூர்த்தி, கோவிலின் உட்பிரகாரத்தை 3 முறை வலம் வந்தார். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், சிவாச்சாரியார்கள் பாலகிருஷ்ணன், வெங்கடேசன், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி, உபயதாரர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.