ஆனி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2016 12:07
ராமேஸ்வரம்: ஆனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அமாவாசை நாட்களில் பித்ரு தோஷம் நீங்குவதற்காக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருவது வழக்கம். நேற்று ஆனி அமாவாசை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். தொடர்ந்து புரோகிதர்கள் மூலம் முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு சுவாமி, அம்மனை வழிபட்டனர். அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை முதலே ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.