அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2016 12:07
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அருகே உள்ள அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலி ல் ஐந்து வகையான இலைகளை கொண்ட தல விருட்சம் உள்ளது. ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் இந்த தலத்திற்கு வந்து அம்பாளை பூஜித்துவேண்டிய வரங்க ளை பெற்றுள்ளனர். இங்கு அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரண டைந்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஆனி மாத அம்மாவாசையான நேற்று காலை கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கோயில் தலைமை அர்ச்சகர் தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல், பட் டு புடவைகளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வத்ததார். தொடர்ந்து அம்பாலுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் க லந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியார் கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.