பதிவு செய்த நாள்
05
ஜூலை
2016
12:07
பவானி: பவானி, ஊமாரெட்டியூர் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா மற்றும், 108 சங்காபிஷேக விழா நடந்தது. அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம், 9ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. கோவில் மண்டல பூஜைகள் நிறைவடைந்ததையொட்டி, சுவாமிக்கு சங்காபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கென அப்பகுதியினர், காவிரி ஆற்றிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் அம்மனுக்கு, 108 சிறப்பு சங்காபிஷேக பூஜை மற்றும் பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதணை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.