Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரவீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ ... தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாடிப்பட்டி ஜெய வீர சஞ்சீவி ஆஞ்சனேயர் கோயில் கும்பாபிஷேகம்: வரும்10ல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2016
06:07

மதுரை: வாடிப்பட்டி அருகே உள்ள பொன்பெருமாள் மலை மீது அமைந்துள்ள ஜெயவீர சஞ்சீவி ஆஞ்சனேயர் கோயிலுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (10ம் தேதி) காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் திருமோகூர் ராஜா பட்டர் அவர்களால் மஹா சம்ப்ரோக்ஷணமும் (கும்பாபிஷேகம்) அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மஹாஅர்ச்சனை விமரிசையாக நடைபெறவிருக்கின்றன.

Default Image

Next News

 
மதுரை மாவட்டம், குலசேகரன்கோட்டை, வாடிப்பட்டி, இராமநாயக்கன்பட்டியில் பொன்பெருமாள் மலை உள்ளது. இம்மலை தெய்வீக அருள்சக்தி வாய்ந்தது. இம்மலையின் அடிவாரத்தில் ஸ்ரீஸ்ரீநிவாஸப் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய் சர்வ வரப்பிரசாதியாய் அருள்பாலித்துக் கொண்டு வருகிறார். இந்த  பெருமாள் கோயிலிருந்து மலை உச்சிக்குச் செல்ல பாதையை சீரமைத்தும், புதிதாக 562 படிகள் கட்டுவித்தும் மலை உச்சியில் தளம் அமைத்தும், ஸ்ரீராமர் பாதம் ஒன்றும், ஸ்ரீஜெயவீர சஞ்சீவி ஆஞ்சனேயர் திருவுருவச் சிலை ஒன்றும் நூதனமாக அமைக்கப்பட்டிருப்பதுமான திருப்பணிகள் திருப்பணிக் கமிட்டியினர், கிராமப்பொதுமக்கள் மற்றும் திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் நடந்தேறியுள்ளன. இதில் ஸ்ரீராமர் பாதம் மற்றும் புதிதாக மலையின் கீழிருந்து உச்சிவரை கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளுக்கு பூஜை செய்யப்படுகிறது.  இம்மலை உச்சியில் அமைந்திருக்கும் தீப ஸ்தம்பத்தில் பொன்பெருமாளை ஜோதி சொரூபமாக எழுந்தருளச் செய்து மக்கள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலையில் தீபம் ஏற்றி வழிபடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த தீபதரிசனம் திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்திற்கு ஒப்பானதாக எண்ணப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

9.7.2016 (சனிக்கிழமை)
மாலை: 4.00 மணி முதல் 5.00 மணிவரை- விவேகானந்த கல்லூரி நரேந்திரா பஜனைக்குழு மாணவர்களின் பஜனை
மாலை: 5.00 மணி முதல் 6.00 மணிவரை- சொற்பொழிவு-புவிக்கு நாயகன் கவிக்கு நாயகன்-அனுமன் நிகழ்த்துபவர்: ஜகந்நாத பராங்குசதாசன் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை மதுரைகல்லூரி, மதுரை.
மாலை: 6.00 மணிக்கு மேல்- எஜமானர் வரணம், ஆச்சார்யர் அழைப்பு, பகவத் பிரார்த்தனை பகவத் அனுக்ஞ விஷ்வக்ஷேனர் ஆராதனை, மஹாஸங்கல்பம்
வாசுதேவ புண்யாகவசனம், மிருத்சங்ரஹணம், வாஸ்து ஸாந்தி, அங்குரார்பணம், ரக்க்ஷாபந்தனம் யாகசாலை பிரவேசம், துவாரபூஜை, பாலிகைபூஜை, சக்ராப்ஜ மண்டலபூஜை கும்ப ஆவாஹணம், திருவாராதனம், வேதவிண்ணப்பம்
தீபாராதனை, முதல் கால யாகசாலை ஆரம்பம், பூர்ணாஹுதி
தளிகை கண்டருளல், சாற்றுமுறை, கோஷ்டி, அதனைத்தொடர்ந்து திருமஞ்சனம் நடைபெறும்.

10.7.2016 (ஞாயிற்றுக்கிழமை)

காலை: 7.00 மணிக்கு- சுப்ரபாதம், கோபூஜை, புண்யாகவசனம் துவாரபூஜை, பாலிகை பூஜை, சக்ராப்ஜ மண்டலபூஜை கும்பத்திற்கு திருவாராதனம் வேதவிண்ணப்பம் தீபாராதனை, இரண்டாம் கால யாகசாலை ஆரம்பம், பூர்ணாஹுதி
காலை: 9.00 மணிக்கு மேல்- துவாரபலி, யாத்ராதானம், தசதானம், கடோத்தாபனம்
காலை: 10.00 மணிக்கு- சிம்ஹ லக்னத்தில் மஹாசம்ப்ரோக்ஷணம்
திருவாராதனம் சாற்றுமுறை, கோஷ்டி, பிரசாதம் வழங்குதல் எஜமானர் மரியாதை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar