பதிவு செய்த நாள்
08
ஜூலை
2016
11:07
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து கொடிமரங்கள் உள்ளன. கோவில் கோபுரங்கள், சிலைகள் புனரமைத்து, கடந்த 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, இக்கோவிலுக்கு குடமுழுக்குப் பணிகளுக்கு முன்பாக கடந்த ஆண்டு 18.5 லட்சம் ரூபாய் செல வில் மேற்கு கோபுரம் அழகிய வேலைப்பாடு களுடன் புதுப்பிக்கப் பட்டது. அப்போது, மத்திய அரசின் தொல்லியல் துறை தென்மண்டல அதிகாரி மூர்த்தீஸ்வரி நேரில் ஆய்வு செய்து, கோபுர ங்கள், கட்டடங்களின் பழமை மாறாமல் புதுப்பிக்க அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, ஐந்து கொடிமரங்கள் மட்டும் புதிதாக நடப்பட்டு, மாசி மகப் பெருவிழா நடந்தது. அதன் பிறகு கோவில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட மேற்கு கோபுரம் உள்ளிட்ட ஐந்து கோபுரங்களிலும் ஆலம், அரசங் கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கோவில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட வா ய்ப்புள்ளது. எனவே, கோவில் கோபு ரம் சிதைவடைவதை தடுக்க, அதில், வளர்ந்துள்ள செடி, கொடிகள், ஆலம் மற்றும் அரசங் கன்றுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.