ஆர்.எஸ்.மங்கலம்,:ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி பாண்டி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. பின் யாக சாலையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட புனித நீர் கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத் தலைவர் முனீஸ்வரன் தலைமையில் கிராமத்தினர் செய்திருந்தனர்.