மாணிக்கவாசகர் குரு பூஜை ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2016 12:07
சிதம்பரம்: சிதம்பரத்தில், பர்ணசாலை ஆத்மநாத ஆவுடையார் கோவிலில் நடந்த மாணிக்கவாசகர் மகா குரு பூஜை நடந்தது. சிதம்பரத்தில் மாணிக்கவாசக நாயினார் ஆத்மநாத ஆவுடையார் திருக்கோவிலை உருவாக்கி வணங்கி வந்தார். இந்த கோவிலில் மாணிக்கவாசகர் திருவாசகத்தை சொல்ல, நடராஜர் தன் கைப்பட எழுதிய சிறப்பு மிக்க கோவிலில் மாணிக்கவாசகர் மகா குரு பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி சுவாமி சன்னதியில் காலை 8:00 மணிக்கு சிவனடியார்களின் சிவபூஜை வழிபாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி சன்னதியில் குரு பூஜை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவ பக்தர்கள் தேவாராம் திருவாசகம் பாடி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் மற்றும் யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மாகேசுவர பூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குரு நமச்சிவாய மூர்த்தி சுவாமி மடம் டிரஸ்டி பசவராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.