பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் பழுதுநீக்கப்பட்டு நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் இயக்கப்பட்டது.பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடங்களில் செல்லும்வகையில் ரோப்கார் தினமும் காலை 7மணி முதல் இரவு 9 மணி வரை இயங்குகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 5ல் கீழ் தளத்திலுள்ள மோட்டாரில் உதிரிபாகம் (டிரைவ்) பழுதுகாரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது புதிய உதிரி பாகம் மாற்றப்பட்டு ரோப்கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்காக நேற்றுமுதல் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.