ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்பது குறித்து குர்ஆன் வசனங்கள் சிலவற்றைக் கேளுங்கள். *மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவில்இருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும் அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். *ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்தற்கேற்ப பங்கு உண்டு மேலும் பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்தற்கேற்ப பங்கு உண்டு. *உங்களில் எவருடைய நற்செயலையும் நான் (அல்லாஹ்) வீணாக்கவே மாட்டேன். அவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி. நீங்கள் ஒருவர் மற்றவரில் இருந்து தோன்றிய ஒரே இனத்தவர்களே. மேலும் நற்செயல்கள் புரிவோர் அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி, இறை நம்பி க்கை கொண்டவர்களாக இருப்பின் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். மேலும் இம்மியளவும் அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள். நபிகள் நாயகமும் ஆண்,பெண் சமத்துவம் பற்றி க ருத்துசொல்லியுள்ளார். “பொதுவான நியதிப்படி, ஆண்கள் மீது பெண்களுக்கு சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல!” என்பது அவரது கருத்து.