பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
12:07
கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம் ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடலுார், கூத்தப்பாக்கம் வள்ளலார் நகரில் அமைந்துள்ள ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 7ம் தேதி விக்னேஷ்வர பூஜை, 8ம் தேதி மகாலட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், முதல் கால யாக பூஜை நடந்தது. 9ம் தேதி விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, மூலமந்திர ேஹாமம், மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு மண்டலாபிஷேகம் துவ ங்குகிறது. கண்ணபிரான் கோவில்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திருவரசம்பிள்ளைத் தோட்டத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபி ரான் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 8ம் தேதி திருமஞ்சனம், அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடந்தது. 9ம் தேதி ரக்ஷா பந்தனம், முதல் கால யாக பூஜை, சாற்றுமுறை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, ய õத்ராதானம், கும்பாபிஷேகம் நடந்தது.