பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
12:07
தேவாரம்: தேவாரம் பாலசுப்ரமணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேவாரம் பிள்ளைமார் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பாலசுப்ரமணி சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமத்துடன் துவங்கின. வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்ரமணியர் உற்சவ மூர்த்தி அழைப்பு காந்திநகரில் உள்ள தலைமையாசிரியர் ராஜா வீட்டிலிருந்து நடந்தது. நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார் சோமாஸ்கந்தர் நடத்தினார். கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏற்பாடுகளை உறவின்முறை தலைவர் கணேசன், செயலாளர் புகழேந்தி, பொருளாளர் குமரேசன், துணைத்தலைவர் பொன்ராஜ், துணைச்செயலாளர்கள் செல்லையா, நாகராஜ் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். தேனி உதவி தொடக்க கல்வி அலுவலர் இளங்கோவன், டி.டி.463 ஆசிரியர், அலுவலர் கூட்டுறவு சங்க தலைவர் தலைமையாசிரியர் ராஜா, மதுரை துணை ஆட்சியர் பழனிக்குமார், சுகாதார ஆய்வாளர் தாமரை கண்ணன், சிவனேசன் பலசரக்கு மளிகை உரிமையாளர் சிவநேசன்,பேரூராட்சி செயல் அலுவலர் ஆண்டவர், கோபி மொபைல்ஸ் உரிமையாளர் ஜெயக்கண்ணன், மணி எலெக்ட்ரானிக்ஸ் மணிகண்டன், அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சாந்தி, ஆசிரியர் வேல்முருகன், அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் தங்கப்பாண்டி, சமூக நலத்துறை உதவியாளர் கந்தகுமார், வ.உ.சி.,இளைஞர் பேரவை மற்றும் வள்ளி- தெய்வானை மாதர் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.