பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
11:07
அவிநாசி : கோவிந்தா கோஷம் ஒலிக்க, அவிநாசியில், கரிவரதராஜ பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான, ஸ்ரீபூமிநீளா நாயகி சமேத ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் மற்றும் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில்களில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை, 8ல் துவங்கியது; தினமும், காலை மற்றும் மாலையில், ஹோமங்கள், பூஜைகள் நடந் தன. நேற்று அதிகாலை, 4:30 மணி முதல் நிறைவு கால யாகசாலை பூஜை நடந்தது. காலை, 6:05க்கு, கரிவரதராஜ பெருமாள் கோவில் விமானம், மூலவருக்கு, புனித நீரால், கும்பாபி@ஷகம் செய்விக்கப்பட்டது. அதன்பின், விஷ்வக்சேனர், ஆஞ்சநேயர் சன்னதிகளிலும் கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை, 4:00 மணி முதலே திரண்டிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா... கோபாலா...’ என கோஷம் எழுப்பி, வழிபட்டனர். காலை, 10:10க்கு, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில் விமானம், மூலவருக்கு ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள், ‘ஸ்ரீராம் ஜெய்ராம்’ என, கோஷமிட்டனர். பக்தர்களுக்கு குங்குமம், லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி, மெயின் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. ஏற்பாடுகளை, அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல் அலுவலர் அழகேசன் மற்றும் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்தர் பேரவையினர் மேற்கொண்டனர். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கருப்பையா, டி.எஸ்.பி., ராமசாமி, தாசில்தார் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். யாகசாலை மற்றும் கும்பாபி÷ ஷக பூஜைகளை, திருச்சி, திருவெள்ளறை, சவும்ய நாராயணாச்சார்யா சுவாமி தலைமையில், உடுமலை சடகோப பட்டாச்சார்யார், அவிநாசி முரளி பட்டர் உள்ளிட்ட பட்டாச்சார்யார்கள் மேற்கொண்டனர்.