வாலாஜாபாத்: வாலாஜாபாத் சிவ சுப்பிரமணியசுவாமி கோவிலில், புதிய கொடி மரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. வாலாஜாபாத் – செங்கல்பட்டு சாலையில், இந்த கோவில் உள்ளது. இங்குள்ள கொடிமரம் பழுதுபட்டிருந்தது. நன்கொடையாளர்கள் உதவியுடன் புதிய கொடி மரம் தயார் செய்யப்பட்டது. நேற்று காலை, 9:50 மணிக்கு, சிறப்பு ஹோமத்துடன் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.