பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
12:07
சென்னை: பெசன்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஐந்தாவது மஹா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. சென்னை, பெசன்ட் நகர், ஆறாவது குறுக்குத் தெருவில், பக்த மண்டலியால் பதிவு பெறப்பட்ட ரத்னகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 6ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், ஐந்தாவது ஜீர்ணோர்த்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா துவங்கியது. ÷ நற்று, காலை, 9:15 முதல், 10:30 மணி வரை, சிம்ம லக்னத்தில், மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை, 11:15 மணியளவில் மஹாபிஷேகம் நடைபெற்றது. பின், கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதமும், தீர்த்தமும் வழங்கப்பட்டன. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், பாதுகாப்புக்காக, ஏராளமான போலீசாரும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.