பெருமாளுக்கு வாகனம் கருடன். ஆனால், கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. சுபர்ணோ வாயு வாஹனா: என்று கருடனை குறிப்பிடுகிறது. அதாவது காற்றே அதன் வாகனம். கருட மந்திரமான கருடபஞ்சாட்சரிக்கு உடனே பலன் தரும் சக்தி உண்டு. திருவிழா காலத்தில் கருட சேவையில் பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறி. சுவாதியன்று மாலைநேரத்தில் கருடதரிசனம் மிகவும் விசேஷம்.