பதிவு செய்த நாள்
14
ஜூலை
2016
05:07
குறிச்சி: வெள்ளலூரிள்ள முத்தாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதில் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெள்ளலூரிலிருந்து சிங்காநல்லூர் செல்லும் வழியில், குலாலர் சமூகத்தாருக்கான முத்தாலை அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படும். இவ்வாண்டு அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்த, கோவில் கமிட்டியினர் முடிவு செய்தனர். இதற்கான நிகழ்ச்சி, 12 மாலை வாஸ்துசாந்தி பூஜையுடன் துவங்கியது. மறுநாள் முதற்கால யாக பூஜை, கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், பூர்ணாஹுதி, பிரசாதம் வினியோகம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று அதிகாலை, இரண்டாம் கால யாகம் துவங்கியது. நாடி சந்தானம் சன்னவதி ஹோமம், மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு உள்ளிட்டவை நடந்தன. இதையடுத்து, மூலவருக்கு கும்பாபிஷேகத்தை பேரூர் சிவாஜல சுந்தர சிவாச்சாரியார் நடத்தினார். தொடர்ந்து கோ பூஜை, மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தன. திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.