பதிவு செய்த நாள்
15
ஜூலை
2016
11:07
கடலுார்: கடலுார் அடுத்த தென்னம்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 12ம் தேதி காலை 8:00 மணிக்கு, மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. அன்றைய தினம் மாலையில், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூ ஜையும், சுமங்கலி, கன்னிகா பூஜைகளும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகியது. காலை 8:00 மணிக்கு, வரசித்தி விநாயகர், வெங்கடேச பெருமாள், ஆஞ்சநேய சுவாமி ÷ காவில் கும்பாபிஷேகம் நடந்தது. இரவில், வரசித்தி விநாயகர் வீதியுலா நடந்தது. தென்னம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, தென்னம்பாக்கம் சுப்பராயலு ரெட்டியார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.