பதிவு செய்த நாள்
16
ஜூலை
2016
11:07
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலமரத்து திரவுபதியம்மன் கோவிலில் வரும் 22ம் தேதி தீமிதித் திருவிழா நடக்கிறது. விருத்தாசலம் ஆலமரத்து திரவுபதியம்மன் கோவில் தீமிதித் திருவிழா, கடந்த மாதம் 10ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, வேதவியாசர், கர்ணன், தர்மர், கிருஷ்ணர் ஆகியோரின் பிறப்பு, கர்ணன் மகுடாபிஷேகம், தர்மர் மகுடாபிஷேகம், அம்மன் பி றப்பு, அர்ச்சுணன் வில்வளைப்பு, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. வரும் 20ம் தேதி கர்ணன் மோட்சம் உற்சவம் நடக்கிறது. 21ம் தேதி அம்மன் சோதனை கரகம் வீதியுலா, 22ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது. 24ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம், 29ம் தேதி அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், சந்தனகாப்பு மற்றும் மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது.