புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை அங்காளபரமேஸ்வரி கோவில் 35ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை வரும் 7ம் தேதி நடக்கிறது. சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏக தின லட்சார்ச்சனை கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டு 35வது ஏக தின லட்சார்ச்சனை வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. காலை 7 மணி முதல் 9 மணி வரையும், 9 மணி முதல் 11 மணி வரையும், 11 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், 6 மணி முதல் 8 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் தனித்தனி யாக லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனையில் பங்கு பெறும் பக்தர்கள் தேவஸ்தானத்தில் ரூ.300 செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளுமாறு தலைவர் விஜயகுமார், உப தலைவர் ரமேஷ் செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.