பதிவு செய்த நாள்
18
ஜூலை
2016
11:07
திருவள்ளூர்: திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, வரும் 28ம் தேதி, உள்ளூர் விடுமுறை, அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள, சுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும் 28ம் தேதி, ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு, அன்றைய தினம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு, உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும், அன்றைய தினம், இம்மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கும். இந்த விடுமுறை நாளை, ஈடு செய்யும் பொருட்டு, ஆக., 6ம் தேதி, சனிக்கிழமை அன்று, பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என, ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்து உள்ளார்.