முத்தியால்பேட்டை முத்தாலம்மன் கோவில் கும்பாபிேஷகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2016 01:07
வாலாஜாபாத்: முத்தியால்பேட்டை கிராமத்தில், முத்தாலம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை முத்தாலம்மன் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா, 15ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. நேற்று காலை, 8:50 மணிக்கு, முத்தாலம்மன் கோவில் விமானத்திற்கு புனித நீருற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான, பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.