சேலம் ஷீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2016 01:07
அஸ்தம்பட்டி: சேலம் ஷீரடி சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி மாதத்தில் வரும் முதல் பவுர்ணமி தினத்தை, குரு பூர்ணிமாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் குருபூர்ணிமா விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். சேலம், ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று குருபூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல், பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆராதனையும், பக்தர்களின் பஜனையும் நடந்தது. மதியம் ஆரத்தி, மாலையில் சாவடி எனப்படும் பல்லக்கு ஊர்வலத்தில் பாபா உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து நடந்த தீபாராதனை நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.