பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
01:07
உடுமலை: உடுமலை பகுதியில் அம்மன் கோவில்களில் நடந்த ஆடிவெள்ளி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அம்மன் கோவில்களில் ஆடிமாதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா நடந்து வருகிறது. கடந்த 19ம் தேதி ஆடிமாத பவுர்ணமி நடந்தது. ஆடிமாதத்தின் முதல் வெள்ளியான நேற்று காலை திருமஞ்சனம், உச்சிகால பூஜை நடந்தது. காலை, 10:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அபிேஷகமும் இடம்பெற்றன. பக்தர்கள் கேழ்வரகு கூழ் தயாரித்து வந்து அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். விழாவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தன. அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு காலை, 6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் இடம்பெற்றன. பிரம்மா, விஷ்ணு, சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று கோ-பூஜை, மகாலட்சுமி ேஹாமம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், முத்தையா பிள்ளை லே அவுட் சித்தி விநாயகர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன.